பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங் என்கின்ற முகமது அமீர் மரணம்
முன்னாள் கர்சேவகர் பல்பீர்சிங் என்கின்ற முகமது அமீர் ஹைதரபாத்தில் உள்ள பாபா நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமாக இறந்தார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார். பாபர் மசூதியின் குவிமாடத்தில் முதலில் ஏறியவர் பல்பீர் சிங். கரசேவகர்களுடன் இணைந்து மூலம் குவிமாடத்தை தாக்கி நிர்மூலம் செய்தார். சொந்த ஊரான பானிபட்டில் கதாநாயகன் போல மக்களால் வரவேற்கப்பட்டார். பல்பீர் சிங் செயலால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை வருத்தம் அடைந்தார். குற்ற உணர்வு அடைந்த பல்பீர் சிங், தனது தவறை உணர்ந்து இஸ்லாமியராக மதம் மாறினார். முகமது அமீர் என பெயர் மாற்றிக் கொண்ட பல்பீர் சிங், இஸ்லாமிய பள்ளியை நடத்தி வருகிறார். இதுவரை 90 மசூதிகளை கட்டியதுடன், மசூதிகளை பாதுகாக்கவும் உழைத்து வந்தார்
இந்நிலையில் பாபா நகரில் உள்ள அவரது வாடகை வீட்டில் இருந்து ஒரு துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக வந்த காஞ்சன்பாக் போலிசார் அவரது இல்லத்தை அடைந்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கத் தொடங்கியது.
இறப்புக்கான சரியான காரணத்தை தெரியவில்லை, அவர் இறந்ததாக குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஏதேனும் புகார் வந்தால், காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்து வழக்கு பதிவு செய்வார்கள் அதன் பிறகே முழு விவரம் தெரிய வரும் என போலிஸார் கூறியுள்ளார்கள்
Source:
https://www.siasat.com/hyderabad-ex-karsevak-mohammed-amir-dies-suspiciously-in-old-city-2168091/
Tags: இந்திய செய்திகள்
